இதுவரை நடைபெற்ற எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் பெங்களூர் அணி கோப்பை வெல்லவில்லை.கடுமையாகப் போராடினாலும் கோப்பை என்பது பெங்களூர் அணிக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 

 

இதனால் இந்தமுறை கோப்பை வெல்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை அந்த அணி செய்து வருகிறது.சமீபத்தில் பெங்களூர் அணியின் தலைமைப்பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து, வெட்டோரியை நீக்கியது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூர் அணியின் கேப்டனாக டிவிலியர்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

 

இதற்கு பெங்களூர் அணி சமீபத்தில் பதிலளித்துள்ளது. இதுகுறித்து அந்த அணி அளித்துள்ள விளக்கத்தில்,'' விராட் கோலி பெங்களூர் அணியின் சிறந்த கேப்டன்.அடுத்த சீசனிலும் கோலியே எங்கள் கேப்டனாக தொடர்வார்,'' என தெரிவித்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS