வீராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது பொறுப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த வருடம் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்குவதற்கான தகுதியான பட்டியலை மத்திய அரசுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தயார் செய்தது.

 

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே நிர்வாகத் திறமை, பயிற்சி, அணியை வழிநடத்திச் செல்லுதல், அணி நபர்களிடையேயான நல்லுறவை பராமரித்தல் போன்ற விஷயங்களிலும் வீராட் கோலியின் பணியை கருத்தில் கொண்டு, அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வீராட் கோலிக்கு வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

 

இதேபோல் பளுதூக்கும் வீராங்கணை மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் விருது வழங்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

BY SIVA SANKAR | SEP 17, 2018 3:58 PM #VIRATKOHLI #INDIA #CRICKET #AWARD #BHARAT KHEL RATNA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS