'அவருக்கு மரியாதைனா என்னன்னு தெரியாது போல '...கோலியை வறுத்தெடுத்த பிரபல வீரர்!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோற்ற பின் இந்திய கேப்டன் விராட் கோலி,மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக,முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் கடுமையாக சாடியுள்ளார்.

 

ஆஸ்திரேலியவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.இதற்கு பழி தீர்க்கும் விதமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அசத்தலான வெற்றியினை பெற்றது.இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.

 

இந்நிலையில் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள், நான்காவது நாள், கடைசி நாள் ஆட்டம் என மூன்று நாட்களும் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனே அம்பயர் நடுவில் புகுந்து இருவரையும் தடுத்து நிறுத்தினார்.

 

இந்நிலையில் போட்டி முடிந்த பின், இரு அணி வீரர்களும் கைகொடுத்துக்கொள்வது வழக்கமான நடைமுறை. அப்போது கேப்டன் கோலி மரியாதை குறைவாகவும்,சில்லித்தனமாகவும் நடந்து கொண்டதாக,முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் கோலியை கடுமையாக சாடியுள்ளார்.

 

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கைகொடுத்த போது, இந்திய கேப்டன் விராட் கோலி பெயர் அளவுக்கு மட்டுமே கைகொடுத்தார். ஆனால் அவரின் கண்களைப்பார்க்கவில்லை. இதை கவனித்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், கோலி சில்லித்தனமாக நடந்து கொண்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜான்சன் ''கோலியிடம் இருந்து நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை.டிம் கைகொடுக்கும் போது கோலி நிச்சயம் கைகொடுத்திருக்க  வேண்டும்.இவ்வளவு மரியாதை குறைவாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை' என தெரிவித்தார்.

VIRATKOHLI, CRICKET, BCCI, INDIA VS AUSTRALIA, MITCHELL JOHNSON

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS