''அது எப்படி சார்..இங்க வாங்க...அடிக்கலாம் மாட்டேன் இங்க வாங்க''...கோலியை கலாய்த்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்!

Home > தமிழ் news
By |

போட்டியின் போது கோலி ஆடிய வீடியோவை அவரிடமே காட்டி ,கோலியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்,ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியினை பெற்றது.போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது கோலி ஆடிய நடனம் வைரலானது.கோலியின் நடன வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் இதனை நேசிக்கிறார்'' என்று பதிவிட்டிருந்தது.

 

இந்நிலையில் பயிற்சி முடிந்து புவனேஷ்வர் குமார் மற்றும் புரளி விஜயுடன் பெவிலியன் திரும்பி கொண்டிருந்த கோலியிடம்,முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே அந்த வீடியோவை கோலியிடம் காட்டி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனை பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, CRICKET, BCCI, SHANE WARNE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS