'தல தோனி மற்றும் சச்சினின் வாழ்த்து மழையில் கோலி'....ட்விட்டரில் உருகிய அனுஷ்கா!
Home > தமிழ் newsஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்து,இளம் வயதில் எண்ணற்ற சாதனைகளை புரிந்த இந்திய கேப்டன் விராட் கோலி,இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.இளம் வயதில் அதிக ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தவர் விராட் கோலி.
2008-ம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமான வீராட்கோலி தொடக்கத்தில் பல சரிவுகளை சந்தித்தார்.ஆனால் தனது தொடர் முயற்சியாலும்,கடினமான உழைப்பாலும் 2010க்குப் பின் சாதனைகளை மட்டுமே தன் வாழ்வில் கண்டு வருகிறார்.சர்வதேச அரங்கில் விளையாடத் தொடங்கிய முதல் ஆறு ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கோலி தற்போது 4 ஆண்டுகளில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்துள்ளார். நான்காயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்று சச்சின் செய்த சாதனையை சமீபத்தில் கோலி முறியடித்தார்.
ஐசிசியின் ஒருநாள் வீரர் விருது, ஆல்ரவுண்டர் விருது என்று பல விருதுகளைப் பெற்ற வீராட் கோலி சமீபத்தில் மத்திய அரசு வழங்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். சாதனையாளரான கோலி இன்று 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்,தல தோனி என பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வீராட் கோலிக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
"கோலியின் பிறப்பிற்காக கடவுளுக்கு நன்றி" என கோலியின் மனைவியும்,பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Happy Birthday Virat | Wishes Come Pouring In As Indian Skipper Turns 30
- Artist Creates World's 'Largest' Diya Portrait As A Birthday Gift To Skipper Virat Kohli
- ‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்!
- Virat Kohli speaks out about Dhoni's exclusion from T20I squad
- Virat Kohli leaves touching message for Kerala; Read it here
- 'சிறப்புக்குழந்தை'க்காக தல-தளபதி செஞ்ச வேலைய பாருங்க.. கண் கலங்குவீங்க!
- 'ஒரே ஒரு போட்டோ தான்'.. பும்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
- இந்திய வீரர்களின் உணவில் 'மாட்டு இறைச்சி' வேண்டாம்; பிசிசிஐ வேண்டுகோள்
- விராட் கோஹ்லியின் பிறந்த நாளுக்கு ரசிகனின் பிரம்மாண்ட ‘கலை பரிசு’ !
- Watch Video: 'தல தோனி'க்கு 35 அடி உயர கட்-அவுட்.. கொண்டாடும் ரசிகர்கள்!