அரசு பேருந்தை இயக்கும் குரங்கு : டிரைவர் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

கர்நாடகாவில் அரசு பேருந்தினை குரங்கு ஒன்று இயக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக  மாநிலத்தின் தேவநாகரி பகுதியில் இயங்கும் கர்நாடக மாநில டிரான்ஸ்போர்ட் புறநகர் பேருந்தினை அதன் டிரைவரின் உதவியுடன் குரங்கு ஒன்று, ஸ்டிரயரிங்கில் அமர்ந்தபடி உட்கார்ந்து இயக்கிக்கொண்டிருப்பது போன்ற அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கும், கேலிக்கும் உள்ளாக்கியுள்ளது.

 

டிரைவர் சீட்டில் இருக்கும் டிரைவர் ஸ்டியரிங்கை பட்டும் படாததுமாக பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டே டிரைவர் வர, ஸ்டியரிங்கை திருப்பும் குரங்குதான் பேருந்தை இயக்குவது போல் இருக்கும் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகளை அச்சுறுத்திய டிரைவரது செயலைக் கண்டித்து அவரை கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BUZZSTORY, BUSSTORY, KSRTC, KARNATAKA, MONKEY, DRIVER, MONKEYDRIVESBUS, VIRAL, VIDEO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS