'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்!
Home > தமிழ் newsகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ஃபார்மில் இல்லாத தோனி, பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதனால் அடுத்து நடக்கவுள்ள 2019-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டியில் தோனி ஆடுவாரா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்தன.
எனினும் தோனியின் தலைமைப்பண்பும் தனித்துவமான ஆலோசனையும் இன்றைய வீரர்களுக்கும் அடுத்து இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கும் உலகக்கோப்பைக்கும் தேவை என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக அண்மையில் நடந்த மெல்போர்ன் ஒருநாள் போட்டித்தொடரில் தோனி அபாரமாக ஆடி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதற்காக தோனி தன் பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்துக்கு செல்லும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் தோனி.. தோனி என்று கோஷமிட, அதன் நடுவே கெத்தாக நடந்து செல்கிறார் தோனி.
இந்த வீடியோ இணையத்தில் பலகோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தங்களது ஆஸ்திரேலிய அணிக்கு ரிக்கி பாண்டிங்கின் தலைமை அனுபவமும் ஆலோசனையும் எந்த அளவுக்கு அவர் விலகிய பிறகும் முக்கியமானதாக இருந்ததோ அந்த அளவுக்கு கோலிக்கு தோனியின் உறுதுணைவு அமைய வேண்டும் என்று தன் நம்பிக்கை விருப்பத்தை தெரிவித்ததுடன் பாராட்டியுமுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Maxwell who dropped Dhoni yesterday shares interesting tweet
- ‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்!
- ‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்!
- ஆஸ்திரேலிய மண்ணில் முழுமையான வரலாற்று வெற்றி.. அடித்து ஆடிய தோனி..முழுவிபரம் உள்ளே!
- ‘சுத்தி வர முடியாதா?’.. கண்ட்ரோலை இழந்த ‘கூல்’ தோனி.. வாங்கிக் கட்டிக்கொண்ட வீரர்!
- ‘காதலியின் ஆசையை நிறைவேற்றுவாரா?’.. வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்!
- 10 years ago, Now and Always! CSK's 10 Year Challenge featuring MS Dhoni
- After Harbhajan, now an international CSK player tweets in Tamil
- டார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா?’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி!
- ‘அப்போ தோனி.. இப்போ கோலி’.. ஐசிசியும், அஷ்வினும் வெளியிட்ட #10YearChallenge!