கைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்!

Home > தமிழ் news
By |

கைதாகி போலீஸ் காவலில் இருந்தபோதும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பாடத்திட்டங்களை மாணவர்கள் சிலரை அழைத்துச் சொல்லிக் கொடுத்துள்ளதை அடுத்து அந்த ஆசிரியரின் செயல் தமிழக மக்களிடையே வெகுவாக பாராட்டைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஊழியர்கள்  9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பலர் பள்ளிக்குச் செல்வதை புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக நிறைய தனியார் பள்ளி ஆசிரியர்களையும் முதுகலை அரசு ஆசிரியர்கள் சிலரையும் கொண்டு தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த போராட்டம் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கைது செய்து ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாததால், ஆசிரியர்களை மட்டுமே நம்பி அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வியாண்டுக்குள் கற்க வேண்டிய பாடங்கள் பாதியில் நிற்பதாக பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனால் இந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் புதுக்கோட்டையின் கந்தர்வக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் தெய்வீகன், தன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இரண்டு 9,10-ஆம் வகுப்பு மாணவ தலைவர்களை தான் கைதாகி தங்கவைக்கப்பட்டிருந்த கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து நடத்த வேண்டிய பாடங்களை சொல்லிக்கொடுத்து, சக மாணவர்களுக்கு சொல்லித் தரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல் மற்ற வகுப்பு மாணவ தலைவர்களையும் வரவழைத்து படிக்க வேண்டிய மற்றும் எழுத வேண்டிய பாடங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளர். கைதாகியிருந்த கல்யாண மண்டபத்தின் கேட்’டுக்குள் இருந்தபடி கம்பிகளின் இடுக்கில் புத்தகத்தை வாங்கி கேட்’டுக்கு அந்த பக்கம் நிற்கும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த இந்த ஆசிரியர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

SCHOOLSTUDENT, TEACHERSSTRIKE, TAMILNADU, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS