டார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா?’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி!

Home > தமிழ் news
By |

தனியார் காப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாடுகளை மிகவும் கண்டிப்புடனே வைத்திருப்பது வழக்கம்.

டார்கெட்டுகளை நிறைவேற்றச் சொல்லி பிரஷர், கண்காணிக்கப்படுதல், பெர்ஃபார்மென்ஸ் அல்லது ஒழுங்கீனத்தால் சம்பளம் குறைக்கப்படுதல் போன்றவை எந்நேரமும் நிகழலாம். அறிவிப்புடனோ-அறிவிப்பின்றியோ எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம்.

எனினும் ஐரோப்பியாவின் தொடக்க கால எந்திர உற்பத்தி முறையில் 14 மணி நேர வேலை நேரம் மற்றும் கட்டாய ஓவர்டைம் பணி போன்ற சூழல்களில் அதிக டார்கெட் கொடுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை ஒப்பீடு செய்தால், இன்றைய கார்ப்பரேட்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுயமரியாதையும், மாண்பும், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் எத்தனையோ மடங்கு மேம்பாடு அடைந்துள்ளன.

ஆனால் சீனாவின் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கொடுத்த டார்கெட்டினை முடிக்காததால் அளிக்கப்பட்டுள்ள தண்டனை உலகின் பெருநிறுவன ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு, ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதும் ஒரு கறையை பூசியுள்ளது.

அதன்படி, ஊழியர்கள் அனைவரும் கொடுத்த டார்கெட்டினை முடிக்க முடியாத காரணத்தால், கைகளையும் கால் முட்டிகளையும் நிலத்தில் ஊன்றி குழந்தை தவழ்வது போல், பொதுமக்கள் பார்வைக்குட்பட்டு பொதுச் சாலையில் ஊர்வலமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தன்மானத்தை இழிவுபடுத்தும் தண்டனை என்றும் கீழ்த்தரமான, அவமானகரமான மற்றும் கொடூரமான தண்டனை என்றும் பலரும் சமூக வலைதளத்தில் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

CHINA, CORPORATE, COMPANY, MNC, EMPLOYERS, EMPLOYEE, HR, HUMILIATING, HORRIBLE, PUNISHMENT, DENIGRATING, VIRAL, VIDEOS, VIRALVIDEOS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS