'எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை'.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்!

Home > தமிழ் news
By |

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது.

 

கடந்த நவம்பர் 29ஆம் தேதி பெங்களூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முராப் என்ற கிராமத்தில் இருக்கும் ஏரி ஜகிர்தார்,இந்த ஏரியில்விழுந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்துகொண்ட பெண் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதால் நீர் மாசுபட்டு விட்டது என ஊர் முழுவதும் வதந்தி பரவியது.இதனால் குடிநீருக்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் பயன்பட்டுவந்த அந்த ஏரியினை  ஊர் மக்கள் புறக்கணித்தனர். 3 கி.மீ. தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்துவரத் தொடங்கினர்.

 

இது குறித்து தகவல் அறிந்து வந்த  அரசு அதிகாரிகள்,ஏரியைப் பார்வையிட்டுள்ளனர். அந்த ஊர் மக்களைச் சந்தித்த அவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் இறந்தவுடன் ஹெச்.ஐ.வி. கிருமிகளும் இறந்துவிடும் எனவும் நீரிலோ காற்றிலோ அவை உயிருடன் இருக்காது என்பதால் அந்த ஏரி நீர் பாதுகாப்பானதே என விளக்கியுள்ளனர்.

 

ஆனால் அவர்களின் விளக்கத்தை ஏற்காத கிராம மக்கள் ஏரி நீரை கண்டிப்பாக வெளியேற்ற வேன்டும் என போராட்டம் நடத்தினார்கள்.இதனால் வேறு வழியின்றி 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றி வீணாக்கப்பட்டுள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS