அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்ட அவரது தந்தை!
கடந்த வருடம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அச்சமயம் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் ரூ 20 லட்சம் பணமும், புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான கல் குவாரியிலிருந்து ஆயிரம் மடங்கு அதிகமாக கற்களும், செவிலியர் கல்லூரிகள், பாரா மெடிக்கல் கல்லூரிகள் தொடங்குவதற்காக பெறப்பட்ட கோடிக்கணக்கிலான லஞ்சப்பணமும், சத்துணவுத்து திட்டத்தின் கீழ் அரசு பணிக்கான நேர்முகத்தேர்வு கடிதம், செவிலியர் இடமாற்றத்திற்கான லஞ்சப் பணம், மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதோடு விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனுவாசனிடம் இருந்தும் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை அடுத்து விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை மறுத்துள்ள நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியிடம் நடத்திய விசாரணையில் அரசு பணி பெற்றுதருவதாகவும், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றுத்தருவதாகவும் பலரிடம் விஜயபாஸ்கர் பலரிடம் லஞ்சம் பெற்றார் என்பதை அவரது தந்தை ஒப்புக்கொண்டதாக முதலில் வருமான வரித்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டது. பின்னர் விஜய பாஸ்கரின் தந்தை இதனை மறுத்துள்ளதாகவும், தான் அவ்வாறு எந்த வாக்குமூலமும் கூறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அவர் பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி, அதிமுகவுக்கு நெருக்கடியை உண்டாக்கி வருகின்றன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- "DMK will have to face consequences": warns MK Alagiri
- சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்!
- D Jayakumar pens poem in Japan to his 'son', a lion cub
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
- தமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- சென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்!
- ’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது!
- எம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா?
- "Shooting and meeting are not the same": D Jayakumar slams Rajinikanth
- திருப்பூரைத் தொடர்ந்து தேனியில் 'பிரசவம்' பார்த்த கணவர்... தொடர் சர்ச்சை!