டிக் டிக் டிக் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக, அடங்க மறு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார்.

 

இந்த நிலையில் 'அடங்க மறு' படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை மிகப்பெரிய தொகையைக் கொடுத்து, விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில்  வெளியான 'விஸ்வரூபம் 2' படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | AUG 21, 2018 11:57 PM #JAYAMRAVI #ADANGAMARU #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS