‘சிறையில சொகுசாக இருக்க ரூ.2 கோடி லஞ்சமா?’.. சசிகலாவிற்கு வந்த அடுத்த சோதனை!

Home > தமிழ் news
By |

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுவரும் வரும் சசிகலா விஐபி -களுக்கான சலுகைகளுக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகாரின் அடுத்த கட்ட விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை மும்மரமாக இறங்கியுள்ளது. 

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவும் மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகைளை மீறி சிறப்பு சொகுசு சலுகைகள் வழங்கப்பட்டதாக டிஐஜி ரூபா ஏற்கனவே புகார் அளித்திருந்தார். முன்னதாக அதற்கான ஆதாரமாக வீடியோக்களும் வெளிவந்திருந்தன. 

இதனையடுத்து புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில்  உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குக்கர் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருட்கள் இருந்ததாக டிஐஜி ரூபா புகைப்பட ஆதாரம் தந்திருந்த நிலையில், உயர்மட்டக்குழு அங்கு 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்றபோது அவை மாயமாகியிருந்தன.

ஆனால் சிறை அலமாரியை துழாவியபோது சமையல் பொருளான மஞ்சள்தூள் காணப்பட்டது. எனவே அங்கு சமையல் நடந்ததை உறுதி செய்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், சசிகலா தன்னுடைய சொந்த உடைகளை அணிய அனுமதி அளித்திருந்து உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும் அதே அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில் தற்போழுது பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்ய ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து,  2-வது முறையாக புகழேந்தியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர். தற்போது புகழேந்தி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. 

SASIKALA, TNPOLITICS, JAYALALITHAA, JAIL, VIGILANCE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS