பிறந்த ஒரு வருடத்தில் குழந்தைகள்  நீச்சல் அடிப்பது அரிதான காரியம்தான்.  பெற்றோரின் துணையின்றி நடக்கவே முடியாத சூழல்தான் ஒரு வயது குழந்தைகளுக்கு இருக்கும் என்கிறபோது, 3 வயது இந்த குழந்தை மிகவும் தன்னியல்பாக நீச்சல் அடிக்கும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ப்ளோரிடாவை சேர்ந்தவர் கிரேஸ் பெனாலி.  இவரது குழந்தை கெஸியா. இவர்களின் 1 வயது குழந்தைதான் நீச்சல் குளத்தில் நீந்த தொடங்கியுள்ளது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கான பயத்தை போக்க வேண்டும் என வெளிநாட்டவர்கள் இதுபோன்று குழந்தைகளை சிறு வயதிலேயே நீச்சல் குளத்தில் நீந்த விடுவது இயல்புதான் என்றாலும் ஒரு வயது குழந்தை என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது. ஆனாலும் அழகாக நீந்தி களிக்கும் இந்த குழந்தையை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

 

தங்களுக்கும் இதுபோன்றே சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக்கொடுத்ததாகவும் அதனால்தான் தங்கள் குழந்தையை இப்போதிலிருந்தே பயிற்றுவிப்பதாகவும் குழந்தையின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.  ஆனால் அறிவியல் உண்மை என்னவென்றால், வயிற்றுக்குள் சிசுவாக இருக்கும் குழந்தை பனிக்குடத்தில் தவழும்பொழுதே நீச்சல் கற்றுவிடுகிறதாம்.

 

BY SIVA SANKAR | SEP 18, 2018 12:05 PM #WATER BABY #BABYSWIMING #1YEARBABYSWIMS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS