திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டி கோரப்பட்ட மனு, உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிமதிகள் கொண்ட அமர்வில் இன்று காலை 8 மணி முதல் விசாரிக்கப்பட்டு வந்தது.

 

இதில் திமுக தரப்பில் தொடங்கிய முதற்கட்ட வாதத்தில், மெரினாவில் நினைவிடங்கள் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி ஆகியிருக்கும்போது தமிழக அரசுக்கு என்னதான் பிரச்சனை? என்றும் நேற்றைய தினம் மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயரில் வெளியானது செய்திக்குறிப்பா? அறிக்கையா? என்பன போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மேலும் ‘மெரினாவில் நினைவிடம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை இல்லை’ என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘மெரினாவில் இடமில்லை என்பது நேற்றைய சூழலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நியாஹ்யமான முடிவுதான்; கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டது செய்திக்குறிப்புதானே தவிர, அரசாணை அல்ல; உணர்ச்சிப் பெருக்கில் முடிவு எடுக்க கோருவது நியாயமல்ல; திராவிட இயக்க பெருந்தலைவர் பெரியாருக்கே மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை; மேலும் ராஜாஜி இறந்தபோது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க முனையவில்லை, கருணாநிதியின் இறப்பை திமுக அரசியலாக்குகிறது’ என்று தொடர் வாதங்களை முன்வைத்தார்.

 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யுமாறு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் உள்ளிட்டோர் கொண்ட நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

BY SIVA SANKAR | AUG 8, 2018 10:43 AM #MKSTALIN #KARUNANIDHIDEATH #MKARUNANIDHI #DMK #MARINA4KALAIGNARVERDICT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS