திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சென்று, சென்னை மெரினாவில் உள்ள, அண்ணா நினைவிடத்தின் அருகில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரினார்.
ஆனால் தமிழக அரசு சார்பில் வெளிவந்த அறிக்கையின்படி சில சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தி மண்டபத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்காக 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த அவசர கோரிக்கையை பரிசீலனை செய்யச்சொல்லி திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு இன்று காலை 8 மணி அளவில் விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்படி மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு மெரினாவில் உள்ள அண்ணா நினைவு மண்டபத்தின் அருகே இடம் கொடுக்காமல் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கியிருப்பதாக தமிழக அரசு மீண்டும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த பதில் மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றத்தின் தலையீடு இருப்பது அவசியம் அற்றது என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளும் அவற்றைத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், கலைஞருக்கு மெரினாவின் நினைவு மண்டபம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்படுவதற்கான மனுவில் சில நாழிகை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Rajinikanth pleads state govt for place in Marina for Kalaignar
- Karunanidhi death: Services to be hit tomorrow
- #Karunanidhi, #RIPKalaignar trend worldwide; national mourning and other updates
- Commando security given to CM Palaniswami's residence
- கோபாலபுரத்தில் 'அஞ்சலிக்காக' வைக்கப்பட்டது கருணாநிதி உடல்
- Kalaignar's mortal remains reach Gopalapuram
- தமிழின தலைவருக்கு மெரினாவில் இடம் வேண்டும்.. நடிகர் விஷால் கோரிக்கை !!
- Special hearing tonight to hear DMK's plea on memorial at Marina for Kalaignar
- இன்றிரவு 10.30 மணிக்கு விசாரணை.. ஸ்டாலின் கோரிய மனு!
- MK Stalin requests CM Palaniswami again