18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Home > தமிழ் news
By |

டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பளித்துள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார்.

 

இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

இதன் காரணமாக எம் எல் ஏக்களை விரைந்து  சென்னைக்கு வரும்படி ஆளும்கட்சி எதிர்க் கட்சி தலைமைகள் உத்திரவிட்டதாக தகவல்களும் வந்தன. இத்தகைய பரபரப்பான அரசியல் மாற்றங்களை தமிழக எதிர்நோக்கியிருந்த நிலையில் இந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்திய நாராயணன், ‘ஆட்சிக்கு இடையூறு வரும்போது சபாநாயகர் எடுக்கும் முடிவும் உத்தரவும் சரியானதுதான்..மேலும் சபாநாயகரின் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அவரது உத்தரவு செல்லும்’ என்று குறிப்பிட்டு, இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.

TTVDHINAKARAN, AIADMK, MADRASHIGHCOURT, AMMK, 18 MLA DISQUALIFICATION CASE, VERDICT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS