வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரக்கோயில் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதிவழியாக சென்ற மக்கள் ஆம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள்.இந்தத் தகவலை அறிந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று அவரைப் பார்த்துள்ளார்.
அப்போது சாப்பிடாததால் மயக்க நிலையில் இருந்த அந்த நபருக்கு காவல் உதவி ஆய்வாளர் அருகில் இருந்த ஹோட்டலில் உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்து பாதிக்கப்பட்டவருக்கு அவரே ஊட்டிவிட்டார்.பல நாட்களாக அவர் சாப்பிடாமல் இருந்ததால் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.உணவருந்திய பின்பு சற்று தெம்புடன் காணப்பட்டார்.இருப்பினும் அவரது உடல்நிலையும் நலியுற்று இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார் உதவி ஆய்வாளர்.சிகிச்சைக்கு பிறகு அவர் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
காவல் துறையினரின் இந்த மனிதநேயச் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் மன நெகிழ்வுடன் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- This Open Jail Allows Inmates To Live With Their Family And Step Out For Work
- Policeman Carries Pregnant Woman To Hospital After Ambulance Fails To Reach On Time
- Chennai's Luxury Prisons: TV Sets, Beds, Special Food, Mobiles For Inmates
- SHOCKING: 19-Year-Old CBSE Board Exam Topper Allegedly Gang-Raped
- டிஜிபி வருவதை கவனிக்காமல் சல்யூட் அடிக்க தவறிய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
- 1 கோடி மதிப்புள்ள கண்டெய்னர்.. சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்!
- Watch - Prisoner brutally attacks police with pickaxe at station
- Woman Kills Her Own Baby As She Didn't Have Anything To Feed Him
- This Cop Has A Quirky Way To Manage Traffic On Roads; Here's How
- 'Was A Backbencher, Failed UPSC Four Times': This IPS Officer's Journey Is Truly Inspiring