விஜய் 'சர்கார்' அமைக்க என்னுடைய 'செங்கோலை' பரிசாக அளிக்கிறேன்

Home > தமிழ் news
By |

விஜய் சர்கார் அமைக்க நான் என்னுடைய செங்கோலை பரிசாகத் தருகிறேன் என, சர்கார் படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக வருண் ராஜேந்திரன் கூறுகையில்,''சர்கார் படத்துக்கு தடை கேட்டு நான் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை, எனக்கு  அங்கீகாரம் கேட்டுதான் வந்தேன். 2004-ல் விஜய்க்காக பண்ணப்பட்ட கதை இது. அதை என் இயக்குநரிடம் (எஸ்.ஏ.சந்திரசேகர்) தெரிவித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் சில காரணங்களால் அதனை செய்ய முடியவில்லை.

 

என்னுடைய , இந்தப் போராட்டத்துக்குக் காரணமே எஸ்.ஏ.சி. சார் தான். அவர்தான் எனக்குத் தூண்டுதல். அவர் ஒரு போராளி. எனக்குள் போராட்டத்தனத்தை விதைத்தவரும் அவர்தான். நீதிமன்றத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நான் எஸ்.ஏ.சி. சாரை சந்திக்க இருக்கிறேன்.

 

விஜய்க்கும், அவருடைய ரசிகர்களுக்கும், எஸ்.ஏ.சி. குடும்பத்தாருக்கும் ‘சர்கார்’ அமைக்க என்னுடைய செங்கோலைப் பரிசாக அளிக்கிறேன்,'' என உணர்ச்சிகரமாகத் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS