நேற்று மாலை சென்னை, காவேரி மருத்துவமனையில் காலமான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பூத உடல், சென்னை ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டி வைக்கப்பட்டுள்ளது.

 

அங்கு அஞ்சலி செலுத்திய பிறகு கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்த இரங்கலில், ”தாஜ்மஹால் பூமிக்குள் புதைந்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியாதோ, அது போல் கலைஞர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதாரண மனிதர்களை மரணம் மரிக்க (இறக்க) வைக்கிறது. லட்சிய வாதிகளை மரணம் பிறக்க வைக்கிறது. இளைய சமுதாயம் எழுதிக்கொள்ள வேண்டியவர், புதிய சமுதாயம் பச்சை குத்திக்கொள்ள வேண்டியவர் அவர்' என்று கூறினார்.

 

மேலும் கூறுகையில், ”106 வயது கொண்ட திராவிட கட்சியில் 50 ஆண்டுகள் இருந்த இசைக்குடும்பத்தில் பிறந்து முத்தமிழ் அறிஞராய்த் தோன்றி மின்விளக்கில்லா வீட்டில் வளர்ந்து மின்சாரம் கொடுத்தார். கல்வி பயிலாதவர் பிறருக்கு கல்வி கொடுத்தார். போராளியாகவும் படைப்பாளியாகவும் அரசனாகவும், தேசியக் கொடி போர்த்தி படுத்திக் கிடக்கிறார். அறிஞர் அண்ணாவிற்கு காலம் ஆயுளைக் கொடுக்கவில்லை. பெரியாருக்கு காலம் ஆட்சிப்பொறுப்பை அளிக்கவில்லை. ஆனால் இரண்டையுமே கலைஞருக்கு வழங்கிய காலம் அவரை தற்போது எடுத்துக்கொண்டுள்ளது. எனது 18 நூல்களை கலைஞர் வெளியிட்டுள்ளார்.  அவரின் நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்தன. 75 திரைப்படங்களில் அவரின் எழுத்துக்கள் பங்காற்றியுள்ளன. ஒரு பெயர்.. ஒரு சரித்திரம்.. நான்கே எழுத்து.. கலைஞர். தமிழ் எழுத்தின் கடைசி எழுத்துள்ளவரை அவர் வாசிக்கப்படுவார்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

BY SIVA SANKAR | AUG 8, 2018 8:46 AM #MKSTALIN #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #KAUVERYHOSPITAL #DMK #VAIRAMUTHU #KAVIPERARASUVAIRAMUTHU #KALAINGAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS