இனி இவங்களும் 'ஹெல்மேட் போடணுமா'?...மைதானத்தில் நிகழ்ந்த சோகம்...வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |

மைதானத்தில் இருக்கும் வீரர்கள் மட்டுமல்லாது,அம்பயரும் ஹெல்மேட் போட வேண்டுமோ என்ற கேள்வியினை ஏற்படுத்தி விட்டது,இரானி கோப்பை போட்டியில் நடந்த நிகழ்வு.

இந்தியாவில் நடக்கும் புகழ்பெற்ற உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பையில் விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.இதனையடுத்து விதர்பா அணி வீரர்களை தவிர்த்து,ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய மற்ற அணி வீரர்களை கொண்டு 'ரெஸ்ட் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் விதர்பா அணிக்கு எதிராக போட்டியானது நடைபெற்றது.இந்த போட்டியானது இரானி கோப்பை என அழைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங் செய்த போது, எல்லை கோடு அருகே சென்ற பந்தை விதர்பா அணி வீரர் ஒருவர் மீண்டும் பவுலருக்கு தூக்கிப் போட்டார்.அப்போது அந்த பந்து எதிர்பாராத விதமாக போட்டியின் நடுவர் நந்தனின் தலையில் பட்டு எகிறியது.இது மைதானத்தில் இருந்த வீரர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.உடனடியாக மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

BCCI, CRICKET, IRANI CUP 2019, CK NANDAN, UMPIRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS