மூளையில் ஆபரேஷன் செய்யும்போது பாடிக்கொண்டிருந்த இளம் பெண்!
Home > தமிழ் newsஎல்லாருக்குள்ளும் இருக்கும் திறமைகளை போலவே அசாத்தியமான பாடும் திறன் உள்ளவர்தான் அமெரிக்காவை சேர்ந்த, இளம் பெண் கிரா லேகாநெட்டி. சுதந்திரமான இசைக்கலைஞரான இவர், கிடைக்கும் சிறுசிறு மேடைகளிலும் இசைக் கலைஞராக பாடிவந்தார். திடீரென அவருக்கு ஒருவித வலிப்பும் அதன் காரணமாக மூளையின் சிந்தனை செயல்பாடுகளில் தடங்கலும் ஏற்பட்டது.
இதுபற்றி அவர் கூறும்போது ஒரு ஸ்விட்சை ஆஃப் செய்து ஆன் செய்வது போன்ற ஒரு உணர்வு தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் அவர் வசிக்கும் சீட்டல் நகருக்கு உட்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்குள்ள டாக்டர்களோ, கிராவுக்கு மூளையில் சர்ஜரி ஆபரேஷன் செய்வதற்கு முன்னர், அவருடைய பாடும் திறனை அவர் மூளைக்கு தெரியப்படுத்தி மூளைக்கு அவருடைய திறமை பற்றிய விழிப்பை உண்டாக்கும் முயற்சியாக, சர்ஜரியின் போது பாடச் சொல்லியிருக்கின்றனர்.
சர்ஜரி செய்யும் போது தன்னம்பிக்கையுடன் தான் விரும்பியபடி பாடிய கிரா, ஆபரேஷனுக்கு பிறகும் 48 மணி நேரம் பாடிக்கொண்டிருந்துள்ளார். அந்த அளவுக்கு இவர்கள் எடுத்த முயற்சி கைகொடுத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. உண்மையில் மருத்துவம் மற்றும் அறிவியலை தாண்டி ஒரு சில நேரங்களில் நடக்கும் இதுபோன்ற அற்புதங்களால்தான் மனிதகுலம் தழைத்து நிற்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Teen Sings Through Her Brain Surgery To Help Doctors Preserve Her Singing Talent
- ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது நடந்த விபரீதம்:வைரல் வீடியோ!
- உலக புகழ் ரெஸ்டாரண்ட்டின் மேனேஜரை சரமாரியாக தாக்கும் பெண்:வைரல் வீடியோ!
- ஐபோன் வாங்க, குளியல் தொட்டியில் 350 கிலோ சில்லறைகளை எடுத்து வந்த நண்பர்கள்!
- Teacher Stops Student From Going On A Toilet Break; What He Does Next Is Epic
- ஜன்னல் ஓர இருக்கைக்காக அடம் பிடித்த பயணி: விமான ஊழியர் செய்த காரியம்!
- ‘நான் யார் தெரியுமா?: எனக்கு ஒரு கோப்பை ஒயின் கிடையாதா?’: விமானத்தில் ஒயின் கேட்டு சண்டையிடும் பெண்!
- குழந்தையை சாதூர்யமாக கடத்திய பெண்: 10 வயது சிறுவனின் சமயோஜிதம்!
- திடீரென பிளந்து, பெண்ணை உள்ளிழுத்துக்கொண்ட நடைபாதை: அதிர்ச்சி வீடியோ!
- எஜமானருக்காக 80 நாட்களுக்கு மேல் சாலையில் காத்துக்கிடக்கும் வளர்ப்பு நாய்!