கடந்த செப்டம்பர் 2-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியன்று மனைவி நான்-வெஜ் பீட்ஸா ஆர்டர் செய்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரியின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் காவல்துறை கண்காணிப்பளராக பணியாற்றிய சுரேந்திர குமார் ஐபிஎஸ் என்னும் அதிகாரி, கடந்த புதனன்று தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

விசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் வெளியில் வந்தது.இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் அவரது மனைவி ரவீனா நான்-வெஜ் பீட்ஸா ஆர்டர் செய்தது தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்தது.

 

இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட, உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். எனினும் தனது மனைவியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, சுரேந்திர குமார் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

 

தொடர்ந்து யூ-டியூபில் தற்கொலை செய்து கொள்வது குறித்து சில வீடியோக்கள் பார்த்து அதன்படி விஷம் அருந்தியதாக, கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுரேந்திர குமாரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

BY MANJULA | SEP 7, 2018 5:46 PM #UTTARPRADESH #IPS #PITZA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS