இங்க கூடவா?...'இறந்த வீரரின் உடலோடு செல்ஃபி'...பிரபலத்தை வறுத்தெடுத்த 'நெட்டிசன்கள்'!

Home > தமிழ் news
By |

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் உடலின் முன்னிற்று,மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம் செல்ஃபி எடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமாக தாக்குதலில் உயிரிழந்த 44 வீரர்களில்,கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்த குமார் என்ற வீரரும் ஒருவர்.வீரமரணமடைந்த வசந்த குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது.இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம்,வசந்த குமாரின் உடலின் முன்னிற்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பின்பு அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட அமைச்சர் ''வசந்த குமாரின் இறுதி சடங்கு தற்போது நடைபெற்ற வருகிறது.உங்களை போன்ற வீரர்களால் தான் எங்களை போன்றவர்கள் நமது நாட்டில் அமைதியாக வாழ முடிகிறது'' என கூறியிருந்தார்.இந்நிலையில் அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையாக இருந்தாலும்,இறந்த வீரரின் உடலோடு செல்ஃபி எடுத்து கொண்டது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்து கொண்டு,எப்படி இவ்வாறு பொறுப்பில்லாமல் செயல்பட முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS