இஸ்லாமிய முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

மேலும் 3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் முத்தலாக் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளும், அண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வயது பெண் 62 வயது மதிக்கத்தக்க கணவரால் வாட்ஸாப் மூலம் முத்தலாக் கொடுக்கப்பட்டதாக கூறிய நிலையில், இப்படியான முடிவுகள் எடுப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன. 

 

இதன்படி, முத்தலாக் தடுப்பு சட்டத்தில்  3 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை,

 

1. முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம்.

 

2.முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.

 

3. முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம்.

 

இவ்வாறு முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

BY BEHINDWOODS NEWS BUREAU | SEP 19, 2018 7:31 PM #BJP #NARENDRAMODI #TRIPLETALAQORDINANCE #UNIONCABINET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS