குழந்தைகளின் அத்தியாவசிய உணவுப்பொருள் தயாரிப்பில் 140 வருட பழமையான நிறுவனம் கைமாறியது!

Home > தமிழ் news
By |

இந்திய குழந்தைகள், பெண்களுக்கான இணை உணவு எனப்படும் சப்ளிமெண்ட் உணவு தயாரிப்புகளில் முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் மாறிய ஒரு பிராண்ட் ஹார்லிக்ஸ். 

 

முதல் உலகப்போரின் இறுதியில் இங்கிலாந்து ராணுவ வீரர்களின் உடல் ஊட்டச்சத்துக்காக, செயற்கை செறிவூட்ட முறையில் தயாரிக்கப்பட்டு 140 வருடங்களாக இந்தியாவில் இணை உணவு தயாரிப்பு பொருட்களில் கோலோச்சி நிற்கும் ஹார்லிக்ஸ், ஜிஎஸ்கே எனப்படும் கிளாஸ்கோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்தை சார்ந்தது.

 

இந்த நிலையில்  இதனை நெஸ்லே, கொகோகோலா, கிராப்ட்ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு கடும் போட்டியிட்ட பிறகு, ரூ.31 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கொடுத்து இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ஹார்லிக்ஸ் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது. அதோடு பங்களாதேஷில் உள்ள இதே ஹார்லிக்ஸ் நிறுவனத்தின் 82% பங்குகளையும் யூனிலிவர் நிறுவனம் கைப்பற்றுகிறது.

 

மேலும் இந்த நிதியாண்டில் முக்கிய ஊட்டச்சத்துத் தயாரிப்புகளில் ஹார்லிக்ஸ், பூஸ்ட் ஆகிய இரண்டு பிராண்டுகளின் விற்பனையினால்  ரூ.4 ஆயிரத்து 200 கோடி இந்திய சந்தையில் ஈட்டப்பட்டுள்ளது. ஊட்டச் சத்துக்கான உணவுப் பொருட்களின் மார்க்கெட்டில் 43 % பெற்று ஹார்லிக்ஸ் முதலிடத்திலும், 13% பெற்று நிலையில் போர்ன்விடா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

HORLICKS, UNILEVER, ECONOMICS, INDIA, FOODPRODUCT, FMCG, DIETARYSUPPLEMENT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS