'தாயின் கருவில் இருந்து குழந்தையை எடுத்து மீண்டும் உள்ளே வைத்த மருத்துவர்கள்' ..பதறவைக்கும் காரணம்!

Home > News Shots > தமிழ் news
By |

முதுகுத்தண்டு சரியாக வளர்ச்சி அடையாததால், தாயின் கருவில் இருந்த குழந்தையை எடுத்து அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருவறையில் வைத்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 26 வயதான பீதன் சிம்சன் என்பவர் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கியரோன் என்பருடன் திருமணமான சிம்சன் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து  கர்ப்பம் தரித்து 5 மாதங்கள் கடந்த  நிலையில் வழக்கமான ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது ஸ்கேனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், கருவில் குழந்தையின் தலை சரியாக இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். அதற்குக்  காரணம் குழந்தையின் முதுகுத் தண்டுவடம் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது தான் என கண்டுபிடித்து அதை சிம்சனிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தை கருவில் இப்படியே வளர்ந்தால் பிறந்த பின் நடக்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சிம்சனிடம் கூறியுள்ளனர். இதை சரிசெய்ய குழந்தை பிறப்பதற்கு முன்னர் தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்து 'ஃபீட்டல் சர்ஜரி' என்னும் முறையின் மூலம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு சிம்சன் சம்மதம் தெரிவித்தவுடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு தலைசிறந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சிம்சனின் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து முதுகுத் தண்டுவடத்தை சரிசெய்து மீதமிருக்கும் கர்ப்பகாலத்தை தொடரும் வகையில் சிம்சனின் கர்ப்ப பையில் குழந்தையை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.சிகிச்சைக்கு பின்னர் சிம்சன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ENGLAND, PREGNANT, SURGERY, WOMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES