'மைதானத்தில் அம்பயர் என்ன தூங்கிட்டாரா'?...இப்படி எல்லாமா அவுட் கொடுப்பாரு...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ் news
By |

போட்டியின் போது கள நடுவர் ஒரு அவுட் கொடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இராணி கோப்பைக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.இந்த தொடரில் ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதின.ஆட்டத்தின் 21வது ஓவரின் போது,ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் கிருஷ்ணப்பா கெளதம் வீசிய பந்தை விதர்பா கேப்டன் பஸல் எதிர் கொண்டார்.அவர் அடித்த பந்தை இஸான் கிஷன் கேட்ச் செய்ய,ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியினர் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.

அப்போது இவை அனைத்தையும் கண்டுகொள்ளாதது போல் களநடுவர் நந்தன்,சிறிதும் நகராமல் அப்படியே இருந்தார்.இது வீரர்களுக்கு ஒன்றும் புரியாத சூழ்நிலையினை ஏற்படுத்தியது.சிறிது நேரத்தில் விரக்தியுடன் அடுத்த பந்தை போடுவதற்கு தயாரான போது,கையை உயர்த்தி அவுட் என காண்பித்தார் நடுவர் நந்தன்.இதனை சற்றும் எதிர்பாராத பேட்ஸ்மேன் பஸல் கடும் அதிர்ச்சியடைந்தார்.பஸல் 65 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்திருந்தார்.

முன்னதாக விதர்பா முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் குவித்தது. ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் ராகுல் சஹார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

CRICKET, UMPIRE, FAIZ FAZAL, IRANI CUP

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES