தற்போது மாணவர்கள் மற்றும் இளையதலைமுறையினரிடையே நொறுக்கு தீனி கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.இதனால் அவர்களின் ஆரோக்கியம் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்றது.தொடர்ந்து நொறுக்கு தீனி சாப்பிடுவர்களின் உடல் எடை அதிகரிப்பதுடன் பல வியாதிகளுக்கும் வழிவகுக்கின்றது.கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கேன்டீன்களில் மிகவும் சாதாரணமாக இந்த பொருட்கள் விற்கப்படுவதால் அவர்களும் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

 

இதில்  மாணவர்களின் உடல்நிலை அதிக அளவில் பாதிக்கப்படுவதால் இது குறித்து யுஜிசிக்கு அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.தற்போது இதுதொடர்பாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

 

அதில் நொறுக்குத் தீனி உணவு வகைகளை மாணவ, மாணவிகள் சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் இது போன்ற உணவு வகைகளால் வருகின்றன. குறிப்பாக இந்த வகை உணவுகளால் அவர்களின் எடை அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர்.

 

இதைத் தடுக்கவே கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் ஜங்க் புட் உணவுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த உத்தரவின்பேரில் இந்தத் தடையை அமல்படுத்துகிறோம்.இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS