2 பெண்கள் தரிசனம் செய்த விவகாரம்.. கேரளாவில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு!

Home > தமிழ் news
By |

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்திற்கு இன்று அதிகாலையில் சென்ற 40 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து கேரள மாநிலம் பரபரப்பாக உள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கான தடை உச்சநீதிமன்ற உத்தரவினால் நீங்கியதை அடுத்து பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதில் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. பக்தர்கள் சிலரின் போராட்டங்களால், கடந்தமுறை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நுழைய முடியாமல் திரும்பி வந்தனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் 18 படிகளுக்கு கீழ் நின்றபடி இரண்டு பெண்கள்  தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். அப்போது யாரும் தங்களை தடுக்கவில்லை என்றும், விஐபி நுழைவு வழியே சென்று தரிசனம் செய்ததாகவும், உடன் பாதுகாப்புக்காக போலீஸார் இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதனால் ஆத்திரம் கொண்ட பாஜக, காங்கிரஸ் இளைஞரணியில் இருக்கும் ஐயப்பன் பக்தர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் பேரணிகளிலும் ஈடுபட்டதோடு, கேரள முதல்வர் பினராய் விஜயனின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் இன்று கேரளாவின் பல இடங்களில் கடை அடைப்பு இருக்கலாம் என தெரிகிறது. 

 

#SABARIMALAFORALL, #WOMENINSABARIMALA, #SABARIMALAPROTESTS, SABARIMALA, KERALA, SABARIMALATEMPLE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS