
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உள்ள மர்மங்கள் கட்டவிழ்ந்துள்ளன. சென்னை ஈசிஆர் என்று சொல்லப்படும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற 64 வயது மதிக்கத்தக்கவர் கலை. இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளுக்காக பணிபுரிந்து வந்த, 30 வயது மதிக்கத்தக்க வேலைக்கார இளம் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த தகவல் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டாருக்கு தெரிந்துவிட்டதால், வேலைக்கார பெண் வேலையை விட்டு நின்று விட்டார்.
அதன் பின் வேலைக்கார பெண், சென்னையின் மையப் பகுதியில் குடியிருக்கத் தொடங்கினார். அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்த சப்-இன்ஸ்பெக்டர் கலைக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக, சப்-இன்ஸ்பெக்டர் கலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் வேலையைச் செய்யும் ஒருவருக்கு அவரின் வேலை நிமித்தமாக பலருடைய அச்சுறுத்தல், ஆபத்து இருக்கும், அதனால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என எதிர்பார்த்திருந்த காவல் துறையினருக்கு கலை விஷயத்தில் நடந்திருப்பது அதிர்ச்சிதான். இந்த நிலையில் காவலர்கள் மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள்.
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Man commits suicide after made to watch friend's gang-rape
- "Engineering sucks": 18-year-old IITian commits suicide
- Watch Video: 'ப்பா என்ன ஒரு ரெய்டு'.. ஸ்டண்ட்மேன் போல எகிறிக்குதிக்கும் இளைஞர்!
- பேரறிவாளன் உள்ளிட்ட '7 பேரையும் விடுதலை' செய்ய பரிந்துரை:தமிழக அமைச்சரவை முடிவு
- தாயிடம் இருந்து சேய்க்கு HIV தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் முன்னிலை..விஜய பாஸ்கர்!
- திருவாரூரில் குழாய் மூலம் கொண்டுசெல்லப்படும் பெட்ரோல்.. விளைநிலங்களுக்கு பாதிப்பா..? இந்தியன் ஆயில் விளக்கம்!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் 'விடுதலை' செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது!
- "Taking my parents with me": Man kills parents and commits suicide
- Girl commits suicide due to hair loss
- மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!