நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பியவர் உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார். மிக அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  காந்தியும் நடிகை நிலானியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின.  இந்நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு  வந்த நடிகை நிலானி அங்கு, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் விமலாவிடம்,  திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலானி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனக்கு அறிமுகமான காந்தி தனக்கு ஆறுதலாக இருந்து வந்தார் என்றும் ஒரு நாள் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தியதால், தான் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறினார்.


தாமதமாக திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த பின், லலித் குமாரின் சகோதரிகள் நிலானியிடம், லலித்குமாரின் குணத்தைப் பற்றிச் சொல்லி பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை செய்ததை அடுத்து, நிலானி லலித்குமாரிடம் இருந்து விலக முயற்சித்து, முடியாமல் தவித்துள்ளார். ஒரு நாள் நிகழ்ந்த கைகலப்பில் லலித்குமார் நிலானியை அடிக்கவும், நிலானி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் போலீஸில் புகார் அளித்தால் குழந்தைகளுக்கு பிரச்சனை வரும் என பயந்துள்ளார். அதன் பின் ஓராண்டுகள் கழிய, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிலானி கைதானபோது, நிலானியை ஜாமீனில் எடுக்க உதவிய லலித்குமார் தன் குழந்தைகளை அடித்தும், தன்னை மிரட்டி டார்ச்சர் செய்தும் ஒரு நாள் முழுவதும் தன்னுடன் இருக்கச் சொல்லி,  பேருந்தில் வைத்து  மெட்டி அணிவித்த வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவு செய்ததாகவும் கூறினார் நிலானி.


மேலும் 3 ஆண்டுகள் தொடர்ந்து டார்ச்சர் செய்து, ஓர் நாள் திடீரென தாலி கட்டியதாகவும், அதை கழட்டி எறிந்ததாகவும் கூறிய நிலானி, தன் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளதாகக் கூறியவர், கடந்த 2 நாட்களுக்கு முன் மைலாப்பூரில் காந்தி, தற்கொலை செய்துகொண்டதால் தான் தலைமறைவாகவில்லை என்றும் தன்னைப் பற்றி ஊடகங்கள் தவறாக செய்திகளை பரப்பி வருவதாகவும் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளார். ஆனால் இறப்பதற்கு முன் லலித்குமார் தானும், நிலானியும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

BY SIVA SANKAR | SEP 18, 2018 8:03 PM #SUICIDE #TVACTRESS #NILANI #ACTRESSNILANI #LALITHKUMAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS