7 வயது சிறுவனை கொடூரமாக தாக்கும் டியூஷன் ஆசிரியர்: நடுங்கவைக்கும் வீடியோ!

Home > தமிழ் news
By |

7 வயது சிறுவனை டியூஷன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் உடல் ரீதியான மிகக் கொடூரமான துன்புறுத்தல் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருவது அனைவரிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் வீட்டிலேயே டியூஷன் எடுத்த ஆசிரியரின் இந்த கொடூரச் செயல், சிறுவனின் தந்தையின் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பெற்றோர்கள் பார்வையிடும்போது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

உத்திர பிரதேசத்தின் நவ்ரங்காபத் அலிகார் எனும் இடத்தில் நிகழ்ந்தேறியுள்ள இந்த கொடூர வீடியோவில் வரும் ஆசிரியர் கமல் ஷர்மா, கடந்த ஆறு மாதமாக அமித் என்பவரது மகனுக்கு, அமித்தின் அலுவலகத்தில் வைத்து மதியம் 2 முதல் 3 மணி வரை டியூஷன் சொல்லிக்கொடுக்கிறார். 

 

அதுசமயம்தான், அந்த நிறுவனத்தில் இருந்த மெஷின் சத்தங்களால், ஆசிரியர் கமல் ஷர்மா, அமித்தின் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மகனை தனது ஷூவால் சரமாரியாக அடித்திருப்பது, சிறுவனின் தலைமுடியை பிடித்தும், காதைத் திருகியும், கைவிரல்களை கொடுமைப் படுத்தியும் சிறுவனை துன்புறுத்தியதை அமித்தால் அறிய முடியவில்லை. அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை யதார்த்தமாக சோதனை செய்யும்போதுதான், அமித் தன் மகனது வேதனையையும் வலியையும் உணர்ந்து, மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சிறுவனுக்கு டியூஷன் எடுக்கும் கமல், சிறுவனை தொடர்ச்சியாக அடித்து சைக்கோதனமாக தாக்கிய ஆசிரியரது வெறிச்செயல் தெரியவந்தது. 

 

இதனை அடுத்து போலீசார், டியூஷன் ஆசிரியர் கமல் ஷர்மாவின் மீது, சட்டப்பிரிவு 307 -ன் படி கொலை முயற்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறை உதவி ஆய்வாளர் அஜய் குமார் சாஹ்னி பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

MERCILESSLY, TUTIONTEACHER, BRUTALITY, AGRA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS