திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்புபாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. முன்னதாக பாலத்தின் 18வது தூண் இடிந்து விழுந்த நிலையில், அதன் 20வது தூணும் தற்போது பாலம் முழுதாக இடிந்து விழுந்து பாதையே துண்டிக்கப்பட்டது. 

 


திருச்சி ஸ்ரீரங்கம், டோல்கேட் பகுதிகளின் போக்குவரத்துத் தொடர்புக்காக, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 94  ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது இந்த இரும்பு பாலம். 1928-ல் திறக்கப்பட்ட இந்த  பாலத்தின் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்,  கடந்த 2016ம் ஆண்டில் புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் இந்த பாலத்தின் பயன்பாடு முழுதாக தவிர்க்கப்பட்டது.

 


கடந்த வாரம் உண்டான வெள்ளப்பெருக்கினால்  இந்த இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரு நள்ளிரவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து 18, 19வது மற்றும் 20வது  தூண்கள் அடுத்தடுத்து துண்டாக இடிந்து விழுந்து நீருக்குள் மூழ்கின. பலர் இதனை வீடியோ எடுத்துமிருக்கின்றனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  இதனை அடுத்து இவ்விடத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

BY SIVA SANKAR | AUG 19, 2018 11:30 AM #TNFLOOD #KOLLIDAMBRIDGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS