ஒரிஸாவில் ஜி.எஸ்.டி வசூல் செய்யும் பிரிவில் பணிபுரியும் இணை கமிஷனர் ஐஸ்வர்யா ரிதுபர்னே பதான். 2010ம் ஆண்டு ஒரிஸா மாநில நிதித்துறையில் ஆண் ஊழியராக பணிக்கு சேர்ந்தார் ஐஸ்வர்யா. உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்களாக 2014ம் ஆண்டு திருநங்கைகளை அறிவித்ததை அடுத்து, ஐஸ்வர்யா தன்னை வெளிப்படையாக அறிவித்தார். பெற்றோர்களின் கண்டிப்பில் வளர்ந்த ஐஸ்வர்யா, மூன்று வருடத்துக்கு முன்னர் இருந்து தன்னை விரும்பும் தன் ஆண் பார்ட்னருடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களிடையேயான உறவு குற்றமில்லை என்று கூறும் விதமாக அதற்கான தடைச் சட்டமாக இருந்த பிரிவுச் சரத்து 377ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதன் பின்னரே, ஐஸ்வர்யா தனது காதலரை மணக்கும் முடிவை எடுத்துள்ளார்.
ஐஸ்வர்யாவை பொறுத்தவரை, இப்படி திருநங்கையாக பாலுணர்வு மாற்றத்தை எதிர்கொள்ளும்போது பெற்றோர்களிடம் அடி வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தற்போது சுயமாக முடிவெடுக்கும் பெண்ணாக உருவாகியுள்ள தான், தன் திருமணத்துக்கு பெற்றோரின் சம்மதத்தை எதிர்பார்க்கப் போவதில்லை என்றும், தன்னை விரும்பிய அந்த ஆணை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க போவதாகவும், தனது மகளை ’இயன்றால் அழகிப் போட்டியில் பங்குகொள்ளச் செய்வேன்’ என்றும் கூறியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Meet Meghna Sahoo, India's First Transgender Cab Driver
- Decriminalising homosexuality: Centre ‘leaves decision to wisdom of Supreme Court’
- Special clinics for transgenders in Chennai, Madurai
- Transgender women appointed at TN government hospital
- Transgender alleges that she was denied from entering mall
- Transgender from TN writes to President seeking mercy killing
- TN: Transgender who pushed youth from train takes extreme step