கேரளாவில் கனமழையினாலும், இடுக்கி அணை திறப்பினாலும் பிரதான விவசாயமான ஏலக்காய் தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் அளவில் நாசமடைந்துள்ளன. ஏற்கனவே கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து பருவமழையின் தீவிரம் காவிரி நீர் போகும் மாவட்டங்களையும் தமிழ்நாட்டில் விட்டுவைக்கவில்லை.  தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குமுளி மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. ஈரோட்டிலும் வெள்ளம் பெருக்கெடுத்து பவானி அணை நிரம்பி வழிகிறது. மேலும் அம்மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், பெய்துவரும் கனமழை  காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஆகஸ்டு 16, வியாழன்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

BY SIVA SANKAR | AUG 15, 2018 7:20 PM #RAIN #HEAVYRAIN #KERALAFLOOD #KERALA #TAMILNADURAIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS