பீக் நேரத்தில் மெட்ரோ பயன்படுத்துபவர்களுக்கு ‘இலவச உணவு’.. அரசின் புதிய உத்தி!
Home > தமிழ் newsபொதுவாகவே மக்கள் மெட்ரோ ரயில்களை அவசர காலங்களுக்கு பயன்படுத்துவர். விரைவான பயணிகள் ரயில் என்பதுதான் இந்த மெட்ரோ ரயில்களின் கான்செப்ட்.
அதுமட்டுமல்லாமல் மெட்ரோ ரயில்களை உபயோகப்படுத்துவதால், பெருமளவில் மாநகரப் போக்குவரத்தினை பயன்படுத்தும் பயணிகளுக்கான நெருக்கடி குறைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் மாசுமண்டலங்களும் குறைகின்றன.
அதே சமயம் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, ஸ்மார்ட் சிட்டி ஒன்றை உருவாக்குவதற்கு இதுபோன்ற திட்டங்கள் உறுதுணையாக இருக்கச் செய்கின்றன. அதனால்தான் ஜப்பானின் டோக்கியோ அரசு பீக் நேரங்களில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோருக்கான சலுகையாக இலவச உணவினை வழங்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜப்பானில் ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் இத்தகைய திட்டங்களைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பினை ஜப்பான் முன்னெடுத்ததோடு, இதன் முதல் கட்ட நடவடிக்கையாக குறைந்த பட்சம் 2500 முதல் 3000 பேர் வரை பீக் நேரத்தில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தினால் மெட்ரோ பயணிகளுக்கு இந்த சலுகையினை வழங்குவதாக டோக்யோ அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கைகளால் பீக் நேரமான காலை 7.50 முதல் 8.50 மணி வரையிலான கூட்டம் வெகுவாக குறையும் என்கிற நம்பிக்கையில் இதனை அந்த அரசு அறிவித்துள்ளது என்பதும் சாதாரணமாக இந்த நேரத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 76 ஆயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Washermanpet-DMS stretch of Chennai Metro to open soon! Here's when
- என்ஜின் இடுக்கில் ஆள் சிக்கியது தெரியாமல் வெகுதூரம் வந்த ரயில்.. நெல்லையில் பரபரப்பு!
- திடீரென மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர் .. முதல்வர் நேரில் ஆறுதல்!
- ஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை!
- பச்சிளம் குழந்தையை துப்பட்டாவால் சுற்றி, ரயிலின் கழிவறையில் விட்டுச்சென்ற கொடூரம்!
- Newborn Boy Flushed Down Train Toilet; Found Alive By Cleaners
- 15-Yr-Old Visually Impaired Girl Takes Down Molester In Local Train
- மின்சார ரயிலில் பாலியல் சீண்டல் செய்தவருக்கு பாடம் புகட்டிய பார்வையற்ற சிறுமி!
- You Can Now Rent A Car & Drive Yourself From Metro Stations In Chennai
- ஓடும் ரயிலின் தண்டவாள இடுக்கில் விழுந்த 1 வயது குழந்தை: பதறவைக்கும் வீடியோ!