குரூப் 2 வினாத்தாளில் "பெரியார் பெயருடன் சாதி பெயர்": வருத்தம் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி!

Home > தமிழ் news
By |

குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியார் பெயருக்கு சாதி அடையாளம் கொடுத்ததற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில்,இந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கோருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.அதன் வினாத்தாளில் 'திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்' என்ற கேள்வி இடம்  பெற்றிருந்தது.மேலும் அந்த கேள்விக்கு 4 விதமான பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன.அவ்வாறு கொடுக்கப்பட்ட பதில் ஒன்றில் இ.வெ. ராமசாமி நாயக்கர்என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இவ்வாறு பெரியாரின் பெயருடன் சாதி பெயரும் சேர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு கட்சி தலைவர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்,குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்க வேன்டும் மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கோரா வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் இதற்கு வருத்தம் தொிவித்துள்ளது.மேலும் வினாத்தாள்களை நாங்கள் தயாரிப்பது கிடையாது. அவற்றை நிபுணா் குழு தான் தயாா் செய்து, எங்களிடம் சீலிட்ட கவரில் வழங்கும்.அதை நாங்கள் அச்சிட அனுப்பிவிடுவோம்.அதே முறையில் தான் இந்த வினாக்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது தொடா்பா முறையான விசாரணை நடத்தப்படும்.வரும் காலங்களில் இது போன்ற தவறு நடக்காது எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS