இரவிலும் லைட் வெளிச்சத்தில் மின் ஊழியர்கள்..வைரலாகி வரும் புகைப்படம்!

Home > தமிழ் news
By |

கஜா புயலின் கோர தாண்டவத்தால் உருவான கடும் பாதிப்புகளில் இருந்து மக்கள் அனைவரையும் மீட்டெடுப்பது, பணத்தை விடவும் நல்ல மனங்கள்தான் என்று சொல்லலாம்.

 

தமிழகத்தில் நாகை, தஞ்சாவூர், காரைக்கால், கடலூர் என கஜா புயல் தாக்கிய மாவட்டங்களில் எல்லாம் மின் கம்பங்கள் அறுந்து விழுந்து மின்சாரத் தடங்கல்கள் ஏற்பட்டதுதான் அதிகம். பெருவாரியான மக்களின் தேவைகளும் மின்சாரத்தை ஒட்டியே இருந்தன. 

 

இவற்றை சரிசெய்ய நிதிகளை விடவும் அவசியமானது களத்தில் இறங்கி பணிபுரிய வேண்டிய மனித சக்திகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய மனித சக்திகளின்செயல்கள் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளிவந்து பலரின் மனதையும் நெகிழ வைக்கின்றன. 

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இரவிலும் வாகனங்களின் லைட் வெளிச்சத்தில் மின் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி புகைப்படமாக சமூக வலைதளங்களில் வலம் வந்து பலரையும் உருக்கியுள்ளது.

 

முன்னதாக ஓய்வு பெற்ற மின் ஊழியர், பேருந்து நடத்துனர் என பலரும் களத்தில் இறங்கி மின்கம்பிகளை அகற்றும் பணிகளைச் செய்தவை வீடியோக்களாக வலம் வந்ததால் அவர்கள் மக்கள் மத்தியில் ஹீரோக்களாகவே மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

GAJACYCLONE, TNEB, EMPLOYEES, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS