முடிந்தது கடைசி தேதி.. பொங்கல் பரிசு ரூ. 1000 கிடைக்காதவங்களுக்கு இன்னொரு சான்ஸ்!
Home > தமிழ் newsபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு குடிமக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும், அட்டை ஒன்றுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னதாக ஆளுநர் அறிவித்திருந்தார். அதன்படி, ஜனவரி 14-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
ஆனால் இடையிலேயே வந்த உயர்நீதிமன்ற அறிவிப்பின்படி, அனைவருக்கும் 1000 ரூபாயை தர வேண்டும் என்றால் தமிழக அதிமுக தலைமை, தங்களது கட்சி நிதியைத் தான் எடுத்து மக்களுக்கு தர வேண்டும் என்றும், அரசு பணத்தை மக்களுக்கு தருவதானால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை வேண்டுமானால் வழங்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
தற்போது அந்த 1000 ரூபாய் பொங்கல் பரிசை வாங்குவதற்கான கடைசி நாள் முடிகிற நிலையில், பொங்கல் பரிசினை வாங்காமல், தவறவிட்டவர்கள் பின்னர் இன்னொரு தருணத்தில் மீண்டும் உரிய ஆவணங்களை காட்டி, அந்த 1000 ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளதாக மன்னார்குடியில் நடைபெற்ற, வாகன ஓட்டுனர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கைதாகிறாரா மேத்யூஸ்?..‘அப்படி என்னதான் இருக்கு அந்த வீடியோவுல?’
- 'பொங்கல் பரிசு ஆயிரம் எங்கே?'.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிப்போட்ட கணவர்!
- கொடநாடு வீடியோ: ‘ஆதாரம் இதோ’- மு.க.ஸ்டாலின்; ‘களங்கப்படுத்தும் செயல் இது’-செம்மலை!
- 'கட்சி பணத்த செலவு பண்ணுங்க'..பொங்கல் பரிசு விஷயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி!
- 'போடு தகிட தகிட'.. தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவித்த தமிழக அரசு!
- CM Edappadi Palaniswami announces new district in Tamil Nadu
- தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
- உங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்!
- பிளாஸ்டிக் தடை.. சொந்த செலவில் தூக்குவாளிகள் தந்து அசத்தும் வியாபாரிகள்!
- O Panneerselvam's Brother Expelled From AIADMK For Bringing 'Disrepute To Party'