'போடு தகிட தகிட'.. தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை அறிவித்த தமிழக அரசு!

Home > தமிழ் news
By |

உலகத் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையை பெரும்பாலானோர் தத்தம் சொந்த ஊரிலேயே கொண்டாடுவர். இதனால் நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு இந்த பண்டிகை நாட்களில் இடம் பெறுவோரின் எண்ணிக்கை சற்று கூடுதலாக இருக்கும். நீண்ட தூரம் பேருந்துகளில் பயணித்தும் வாகனங்களை இயக்கி கொண்டும் பலர் செல்வர்.

அதுமட்டுமல்லாமல் இந்த பண்டிகை நாட்களை  உறவினர்களுடன் கொண்டாடுவதை பலரும் விரும்புவதால் பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே கடைத்தெருக்களுக்குச் சென்று வாங்க வேண்டிய, பண்டிகை தொடர்பான பொருட்கள் ஏராளம் இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12- ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. 

சனிக்கிழமையான ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கி 13,14,15,16,17 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக  அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு அடுத்த கிழமைகளான வெள்ளிக்கிழமை, சனி (3-ஆம் சனிக்கிழமை), ஞாயிறு ஆகியவை பணி நாட்களாக இருக்கலாம்.

எனினும் இந்த விடுமுறைகள் எல்லாம் அரசு ஊழியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் மிகச்சரியாக பொருந்தலாம் தனியார் நிறுவனங்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த 6 நாள் விடுமுறை பொருந்துமா என்பது கேள்விக்குறிதான். மேலும் மேற்கண்ட தேதிகளில் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகை, 15-ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று பொங்கல் பண்டிகை.

இவற்றைத் தவிர்த்து இடையிலிருக்கும் தேதிகளிலும் அளிக்கப்படும் விடுமுறைக்கு பதிலாக அதனை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 9-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

EDAPPADIKPALANISWAMI, PONGAL, TAMILNADU, HOLIDAY, FESTIVAL, TNGOVT, LEAVE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS