ஒழுக்கத்தை பாழாக்கும் தீர்ப்பு: பாப்பையா கருத்தால் சர்ச்சை!

Home > தமிழ் news
By |

வயது வந்த ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என பிரிவு 497-ஐ நீக்கி உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் ‘இந்தத் தீர்ப்பு இளைஞர்களின் ஒழுக்கத்தையும் எதிர்காலத்தையும் பாழாக்கும் என்றும், படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற தீர்ப்பு அவர்களை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?’ என்று பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 


மேலும், மனைவி மீது, பிள்ளைகள் மீது, சகோதரிகள் மீது உரிமை இல்லை என்று சொன்னால், யார் மீதும் எவருக்கும் உரிமை இல்லையா? என்று கேட்டுள்ளவர், காலம் காலமாக ஒரு இனம் கட்டிக்காத்த நெறிமிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

SECTION497VERDICT, SOLOMONPAPAIYA, SUPREMECOURT, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS