காதலர் தினத்தன்று ரயில் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்!

Home > News Shots > தமிழ் news
By |

காதலர் தினத்தில், தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி எதிர்பாராத விதமாக ரயில்மோதி விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள பண்பாக்கத்தைச் சேர்ந்த  கவரைப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர், வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், இருவரும் நேரத்தைக் கழிக்கும் விதமாக கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள தண்டவாளத்தின் மீது நடக்க விருப்பப் பட்டு நடந்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு, சென்னையில் இருந்து குமிடிப்பூண்டி வரைச் செல்லக்கூடிய பயணிகள் ரயில் வந்ததை இருவருமே கவனிக்காத நிலையில், ரயில் மோதி அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மாணவியுடன் சென்ற வாலிபர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். பின்னர் அருகில் இருந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு அந்த வாலிபர் அளித்த தகவல்களின்படி, ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதா தலைமையிலான பொலீஸார் விரைந்துவந்து மாணவியின் சடலத்தை மீட்டு, அருகில் இருந்த பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர்.

இதனிடையே வீட்டில் பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வெளியே போன மாணவி மாலை 5.30 ஆகியும் வீடு திரும்பாததால், ஆத்திரமடைந்து தேடிக்கொண்டிருந்த மாணவியின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் மாணவிக்கு நேர்ந்தது குறித்து சந்தேகமடைவதாகவும் அந்த வாலிபரை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபற்றி பேசிய அதிகாரி குமுதா அந்த வாலிபரும், பள்ளி மாணவரும் ஒரே பகுதி என்பதால் காதலர்கள் என்று திட்டவட்டமாக கூற முடியாது என்றும், அந்த வாலிபரை விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

TRAINACCIDENT, SCHOOLSTUDENT, BIZARRE, CHENNAI, VALAENTINESDAY2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES