‘பத்திரிகை ஊழியர்கள் 35 பேரையும் நவ.12 வரை கைது செய்ய மாட்டோம்’: தமிழக காவல் துறை!
Home > தமிழ் newsகல்லூரி மாணவியரை தவறுதலான பாதைக்கு அழைத்துச் சென்று அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் நோக்கில் அம்மாணவியரிடம் செல்பொனில் பேசியதாக தக்க ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி.
இந்த வழக்குக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் நக்கீரன் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரை ஆளுநரை தவறாக சித்தரித்ததாகவும், ஆளுநரின் பணியை செய்ய விடாமல் செய்தததாலும் நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் திடீரென கைது செய்யப்பட்டு பின்னர் அவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் நக்கீரன் மீது தொடரப்பட்ட வழக்குக்கான விளக்கத்தை அடுத்த நாள் ராஜ்பவன் வெளியிட்டது. தொடர்ந்து நக்கீரன் இதழின் ஊழியர்கள் 35 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஊழியர்கள் முன் ஜாமீன் கோரியிருந்ததை அடுத்து அவர்களின் வழக்கு வரும் நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை வரையிலும், அதாவது நவம்பர் 12-ம் தேதி வரையில் நக்கீரன் ஊழியர்கள் 35 பேரையும் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- நக்கீரனுக்காக குரல் கொடுத்த ‘தி இந்து’ குழும தலைவர் N.ராம்.. பரபரப்பு பேட்டி!
- Watch Video - Hindu N Ram reveals what happened at court during Nakkeeran case
- 'கேஸ் இன்னும் முடியல, தொடர்ந்து எழுதுவேன்': அன்றுமுதல் இன்றுவரை 'நக்கீரன்' கோபால்!
- 'ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்'; ‘நக்கீரன்’ விவகாரத்தில் ஆளுநர் மாளிகை விளக்கம்!
- Magistrate refuses to remand Nakkeeran Gopal
- Watch Video:'நக்கீரன் கோபாலை' சிறைக்கு அனுப்ப முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு
- சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழும்புகிறது: மு.க.ஸ்டாலின்!
- ‘பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்.. ஆளுநர் ஆட்சியா இது?’:வைகோ கேள்வி!
- Nakkeeran Editor Gopal arrested at Chennai Airport
- மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் கோபால்!