கஜா:மின் கம்பங்களை சீரமைத்த ஊழியருக்கு விபத்து; ஓடிவந்து கைப்பிடித்த அமைச்சர்!

Home > தமிழ் news
By |

தமிழகத்தில் கஜா புயல் தோன்றி பல மனிதர்களையும் இயற்கை வளங்களையும் அழித்த சோகத்தில் இருந்து இன்னும் பலதரப்பட்ட மாவட்டங்கள் மீண்டு வரவில்லை. அதற்குள்ளே அடுத்தடுத்து மழையும் பாதிக்கப்பட்ட அதே இடங்களில் பொழிந்து வருவதால் மக்கள் தங்கி, பொங்கி, உண்டு வாழ சிரமப்பட்டு வருகின்றனர். 

 

புயல் காரணமாக சுமார் 87 ஆயிரம் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அவற்றை சீர் செய்யும் பணியினை 4,500 பேர் ஆங்காங்கே தீவிரமாக செய்து வந்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூரில் கஜா புயலால் அறுந்துவிழுந்த மின் கம்பங்களை புணரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியர் ஒருவருக்கு திடீரென மின்னாற்றல் பாய்ந்து விபத்து உண்டானது. 

 

உடனே அந்த இடத்தில் இருந்த அனைவருமே பதறிப் போக, அங்கு சேதமடைந்தவற்றை பார்வையிட வந்த தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், திடும்மென மின்விபத்துக்கு ஆளான ஊழியரை நோக்கி ஓடி, தானும் சேர்ந்து, மின் தொழிலாளியை கைப்பிடித்து இறக்கி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். 

 

மின்கம்பத்தில் ஏறி ஜம்பர் அடித்துக்கொண்டிருந்ததாக சொல்லப்படும் மோகன் என்கிற அந்த ஊழியர் மீதும், அருகில் இருந்த முருகேசன் என்பவர் மீதும் திடீரென   பாய்ந்த மின்சாரத்தினால் இருவரும் அலறியுள்ளனர். அதைப் பார்த்த அமைச்சரின் உதவியாளர் முதலில் கைகொடுக்கவும், அவர் குரல் கேட்டு அருகில் அமைச்சர் ஓடியதாகவும் கூறியுள்ளார் விஜயபாஸ்கரின் பெர்சனல் செக்ரட்டரி.

GAJACYCLONE, VIJAYABASKAR, TAMILNADU, TNHEALTH, TNEB

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS