பந்துவீச்சில் சாதனைக்கு முயன்ற மாணவர்.. பேட்டை ஸ்டைலாக சுழற்றி ஆடும் அமைச்சர்!
Home > News Shots > தமிழ் newsதற்போதைய இளைஞர்கள் கிரிக்கெட்டின் புதிய சாதனைகளைச் செய்து கிரிக்கெட்டின் பல மைல் கல்களை தகர்த்து, அடுத்த சாதனை மைல் கற்களை இன்னும் பல தூரம் நகர்த்தி வைத்துள்ளனர்.
கோலியின் தலைமையில் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி, சுமார் 72 வருடங்களுக்குப் பிறகு பெரும் உலக சாதனையை புரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி விளையாடி வரலாற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவும் செய்தது.
குறிப்பாக சுமார் 37 வருடங்களுக்கு முன் மெல்போர்ன் மைதானத்தில் 1981-ஆம் ஆண்டு இந்தியா வென்றது. அதன் பிறகு தற்போது 2018-இல் இந்திய அணி அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வென்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 37 வருடங்களுக்கு முன்பாக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடி வென்ற ஒருவர் கூட அண்மையில் மெல்போர்னில் விளையாடி வெற்றிபெற்ற இந்த இந்திய அணியில் இல்லை.
சொல்ல போனால் கோலி தலைமையிலான இந்த அணியில் இருந்த யாரும், 37 வருடங்களுக்கு முந்தைய அந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் இந்தியா வென்றபோது பிறக்க கூட இல்லை என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு துடிப்பாக தற்போதைய இளம் வீரர்கள் விளையாடுகின்றனர். அவ்வகையில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த செந்தில்குமார் என்கிற மாணவர், தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கினார்.
காலை 5.30 மணியில் இருந்து ஒரு கையை கட்டிக்கொண்டு பந்து வீசினார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார், அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடிய வீடியோ செய்திகளில் வைரலாகியது. அமைச்சர் விளையாடும்போது சுற்றியிருந்த மாணவ, மாணவிகள் விசில் அடித்தும், கரம் மற்றும் குரல் கோஷங்களை எழுப்பியும் அமைச்சரை உற்சாகப்படுத்தினர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- ‘நாங்க ஜோக்கர் இல்ல.. உலகக்கோப்பையில தெரியும்?’.. பேபிசிட்டர் விளம்பரத்தால் கடுப்பான வீரர்!
- பலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா?.. சட்டசபையில் நடந்தது என்ன?
- ‘ஓரினச்சேர்க்கையாளரா இருப்பது தவறல்ல’.. ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகிய வார்த்தைப் போர்!
- 'உலக கிரிக்கெட்டே இவரோட தலையில தான் இருக்கு'...என்ன இவரே இப்படி புகழ்ந்துட்டாரு!
- 'இந்தியாவை எங்களை தேடி வர வைப்போம்'...சவால் விட்டிருக்கும் பாகிஸ்தான்!...எதுக்கு இந்த சவால்?
- கடைசில 'இவரையும்' நீங்க விட்டு வைக்கலயா?...இணையத்தில் ஹிட் அடித்திருக்கும் வீடியோ!
- Watch - MS Dhoni's patriotic gesture during match will leave you awestruck
- கும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ!
- இப்படியா ஓடி புடிச்சி விளையாடுறது?...கன்பியூஸ் ஆன நடுவர்...கடுப்பான வீரர்கள்...வைரலாகும் வீடியோ!
- 'நம்ம கிரிக்கெட்டோட மூளையே 'தல' தான்'...அவர் கண்டிப்பா உலககோப்பைக்கு வேணும்...நெகிழ்ந்த வீரர்!