உஷார்! அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’!

Home > தமிழ் news
By |

ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க தனசேகரன் திருமணமாகி, மனைவி-குழந்தையுடன் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு பேஸ்புக்கில் அழகான ‘புரொபைல் பிக்சர்’ வைத்திருக்கும் பெண் தோழியாகியுள்ளார். 

 

தனசேகரன் அந்த கணக்காளர் ஒரு பெண்தான் எனவும், அந்த புரொபைல் பிக்சர் அந்த பெண்ணுடையத்தான் எனவும் நம்பி வாட்ஸ்-ஆப் நம்பர் கொடுத்து அதிலேயே பேசத் தொடங்கியுள்ளார். காயத்ரி என்கிற பெயரில் தனசேகருடன் சாட்டிங் செய்த அந்த நபர், வெளிநாட்டில் இருக்கும் கணவரை பிரிந்து இங்கு தனியாக வாழ்வதாகவும், தனக்கு வாய் பேச முடியாததால் சிகிச்சைக்கு பணம் சேர்ப்பதாகவும் கூறியுள்ளார்.


உடனே உணர்ச்சிவசப்பட்டு தான் பணம் தருவதாக கூறியுள்ள தனசேகரனை, காயத்ரி(கற்பனைக்கு)  ஓரிடத்துக்கு வரச்சொல்ல, நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்ற தனசேகரினிடம் காயத்ரியின் தம்பி என்று சொல்லி சிலர் வந்து அவரை தனியே அழைத்துச் சென்று தாக்கி, அவரின் தனசேகரின் செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பிடுங்கிக்கொண்டு ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் பணத்தையும் எடுத்துள்ளனர். பின்னர் ரெயில் நிலையத்துக்கு கொண்டுவந்து தனசேகரனை போட்டுவிட்டு தப்பித்துவிட்டனர். பின்னர் அங்கிருந்த வடசேரி காவல் நிலையத்திற்கு சென்று, தனசேகரன் நடந்த விபரத்தை கூறி புகார் அளித்தார்.


வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசாருக்கு பின்னர்தான் ’குமரி மாவட்ட காரங்காடு கல்லுவிளையை சேர்ந்தன் 30 வயது ஆளான பொன்னுலிங்கம் மற்றும் செருப்பங்கோடையை சேர்ந்த 34 வயது சிவலிங்கம்’ ஆகியோர்தான் அந்த ’காயத்ரி’ என்று  தெரியவந்தது.   பெண் போல வாட்ஸ் அப், பேஸ்புக்கில் போலி ஐடியை வைத்து, தனசேகரினிடம் பேசி ஏமாற்றியுள்ளனர் என்பதும், தனசேகரனை போல் பலரை ஏமாற்றியுள்ளதையும் அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

FACEBOOK, CHEATING, FAKE, CRIME, CYBERCRIME, FAKEIDFACEBOOK, TAMILNADU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS