காதல் தோல்வியில் குடித்துவிட்டு, கலெக்டர் ஆபீஸ் வந்த நபரின் விநோத காரியம்!
Home > தமிழ் newsமதுரையில் காதல் தோல்விக்கு வங்கிக்கடன் தரக்கோரி தீக்குளிக்க முயன்ற ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழில் ‘காதல்’ என்கிற திரைப்படத்தில் மெக்கானிக் முருகன் என்கிற கதாபாத்திரம் வரும், அந்த கதாபாத்திரம் இறுதியில் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கபட்டது போல் முடிவு பெற்றிருக்கும். அதேபோல உண்மையாகவே மதுரையில் மெக்கானிக் முருகன் எனபவர் தனது காதல் தோல்விக்காக விநோதமான ஒரு முடிவை எடுத்துள்ளார்.
மதுரை ஆரப்பாளயத்தைச் சேர்ந்த மெக்கானிக் முருகன் என்பவர் மதுபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். உடனே உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த காவல் துறையினர் உடனே மெக்கானிக் முருகனை தடுத்து நிறுத்தி அவரின் மீது தண்ணீரை ஊற்றி காப்பற்றியுள்ளனர். பின்னர் மெக்கானிக் முருகனை கைது செய்து தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், முருகன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அந்த காதல், தோல்வியில் முடிந்ததால், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் காதல் தோல்விக்கு பிரதிபலனாக ரூ.1 லட்சம் வங்கி கடன் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
காதல் தோல்வி அடைந்ததால், மதுபோதையில் வந்து வங்கிக் கடன் கேட்ட சம்பவம் நகைச்சுவையையும் அதற்காக அவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்!
- ‘எய்ம்ஸ் தமிழகத்துக்கு பயன்படும்:மோடி’..ட்ரெண்டிங்கில் #GoBackModi2 ஹேஷ்டேக்!
- தேசிய பெண்கள் கட்சியின் தமிழக ‘தலைவி’யாகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம்!
- 'தற்காலிக ஆசிரியர்களா?’.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி.. ‘சம்பளம் எவ்ளோ தெரியுமா?’
- ‘அப்படியெல்லாம் திறக்கக் கூடாது’.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ‘செக்’!
- 'பசியில் வாடுபவர்கள் இருக்கும் தேசத்தில் கட்- அவுட்டுக்கு பால் ஊத்தணுமா?'.. கொந்தளித்த சீமான்!
- ‘ரூ.3 லட்சம் கோடி முதலீடு; 10 லட்சம் வேலை வாய்ப்பு’.. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்!
- கைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்!
- போராட்ட எதிரொலி: ‘வகுப்பறைகளை திறந்து வைத்து பாடம் நடத்தும் இளைஞர்கள்!’
- ‘சசிகலாவின் பேட்டி ஒரு ‘செட்-அப்’ என்றார்கள்.. உண்மையில் நடந்தது இதுதான்’.. செய்தியாளர் குணசேகரன்!