மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, வகுப்பறையில் தலைமை ஆசிரியர் பார்த்த வேலை!

Home > தமிழ் news
By |

மாணவர்களை திசைத் திருப்பிவிட்டு அவர்களின் வகுப்பறையை, ‘குடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்கும் கெஸ்ட் ஹவுஸ்’ போல பயன்படுத்திய தலைமையாசிரியர் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளார்.

திருவண்ணாமலை, நிர்த்தொம்பி கிராமத்தில் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 30-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியின் தலைமையாசிரியர் மனோகர் இரண்டு நாட்களுக்கு முன், தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை விளையாடச் சொல்லி அனுப்பிவிட்டு, அங்கு, ஏற்கனவே தான் வைத்திருந்த சரக்கு பாட்டில்களை எடுத்து வைத்து, மயக்கம் அடையும் வரை குடித்து தீர்த்துள்ளார்.

இதனையடுத்து அங்கே வந்த மாணவர்கள் டேபிளில் இருந்த ஊறுகாய், சிப்ஸ் பாக்கெட்டுகள், காலி பாட்டில்கள் ஆகியவற்றை கண்டு நடந்ததை புரிந்து கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலைமையாசிரியர் மனோகரின் இந்த ஒழுங்குமுறையற்ற செயல்கள் வாட்ஸ் ஆப் வீடியோவாக பரவத் தொடங்கின. ஆனால் பள்ளியில் குடிப்பதும், குடித்துவிட்டு வகுப்பறை வருவதும் மனோகருக்கு இதுவொன்றும் புதிதான விஷயம் இல்லை என்று சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்பே இதுபோன்ற ஒரு காரியத்தால்தான் வேறு ஒரு பள்ளியில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு இந்த பள்ளிக்கு வந்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்பில் இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அந்த வீடியோவை ஆய்வு செய்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் ஜெயக்குமார், தலைமையாசிரியர் மனோகரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் தலைமையாசியர், வகுப்பறையை இவ்வாறு  பயன்படுத்தியுள்ள சம்பவம், திருவண்ணாமலையில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

SCHOOLSTUDENT, TAMILNADU, HEADMASTER, CLASSROOM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS