முன்னதாக மாவட்ட நூலகங்களின் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை, மூன்றாம் நிலை நூலகர்களாக மாற்றி தமிழக  அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இவ்வழக்கில் தமிழக அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே தொடர்ந்து இழுபறி இருந்துவந்த நிலையில்,17 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு விதிகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இதனால் தேவையில்லாமல் கோர்ட்டை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக மனுதாரர்களுக்கு தமிழக அரசு வழக்கு செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்திருக்கும் இந்த கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

 

மேலும் ‘வரும் காலத்திலாவது தமிழக அரசு கும்பகர்ணனை போன்று தூங்கிக் கொண்டிருக்காமல்’ கோர்ட்டு உத்தரவுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY SIVA SANKAR | SEP 16, 2018 7:04 PM #MADRASHIGHCOURT #TAMILNADU #TNGOVT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS